Reading Time: < 1 minute

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறையில் திடீரென உயிரிழந்த விவகாரத்தில், அதிபர் புடினை ராட்சசன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார்.

ஒட்டாவா நகரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை அழித்தொழிக்க புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்றும் ஜனநாயகத்திற்காக போராடிய நவல்னியின் துணிச்சல் அபாரமானது என்றும் தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 வயது நவல்னி, நேற்றையதினம் உயிரிழந்ததாக ரஷ்ய சிறை நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் அலெக்சி நவல்னி மரணத்திற்கு அதிபர் புடினே காரணம் என பலவேறு அரசிய தலைவர்களும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.