உக்ரேனியப் படைகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட கனேடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் அதிகாரிகள் தரப்பால் வெளியிடப்படவில்லை. இருப்பினும், கனேடியரான மருத்துவ மாணவர் Grygorii Tsekhmistrenko ஞாயிறன்று உக்ரைனின் Bakhmut நகருக்கு அருகாமையில் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், Grygorii Tsekhmistrenko-வின் இறுதிச்சடங்குகளுக்கு உதவும் பொருட்டு, அவரது குடும்பத்தினரை சந்திக்க சென்ற நண்பர் ஒருவரே கனேடிய பத்திரிகைக்கு குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.
உக்ரைனில் உள்ள ராணுவ வீரர் ஒருவரே Grygorii Tsekhmistrenko ஞாயிறன்று கொல்லப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டதாகவும் நண்பரான Adam Thiemann தெரிவித்துள்ளார்.
மேலும், Grygorii Tsekhmistrenko உடன் இணைந்து தாமும் சில மாதங்கள் உக்ரைனில் போர்க்களத்தில் இருந்ததாக Adam Thiemann தெரிவித்துள்ளார். Jack Frye என்பவர் தெரிவிக்கையில், பிப்ரவரியில் போர் தொடங்கிய நிலையில் மருத்துவ மாணவரான Grygorii Tsekhmistrenko உக்ரைனுக்கு திரும்பியதாக கூறியுள்ளார்.