யோர்க் பிராந்தியத்தில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யோர்க் பிராந்திய பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 31 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை 2440 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் 3460 வாகனங்கள் களவாடப்பட்டிருந்தன.
சுமார் 80 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி ஐந்து மில்லியன் டாலர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் கார் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது பிராந்திய வலயத்தில் கார் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 106 வீதமாக அதிகரித்துள்ளது.