Reading Time: < 1 minute
நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.