கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் கனடிய மக்கள் மோசடிகள் காரணமாக 16 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கனடாவில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அநேக கனடியர்கள் நம்புகின்றனர்.
ஆறு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு வகை நிதி மோசடியில் பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரம் டாலர்கள் முதல் பத்தாயிரம் டாலர்கள் வரையில் சிலர் மோசடி காரணமாக இழக்க நேரிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மோசடிகள் காரணமாக 380 மில்லியன் டாலர் இலக்கப்பட்டுள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு இந்தத் தொகை 531 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான கனடியர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளமை பற்றி அறிந்து கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி கனடாவில் நிதி மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.