கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) எச்சரித்துள்ளார்.
கொரோனா போன்று இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதே சமநேரத்தில் அடுத்த பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் -27 உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தில் பெருந்தொற்றுகள் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், இவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு உலக நாடுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.