Reading Time: < 1 minute

சீனாவில் கைது செய்யப்பட்டு 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பிரஜைகளான மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோர் விடுவிக்கப்பட்டு கனடா நோக்கி வந்துகொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோர் சீனாவில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 2008-ஆம் ஆண்டு கைதுர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் பிடியாணையின் கீழ் சீனாவின் குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து இவா்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க வழக்கறிஞர்களுடனான ஒப்பந்தத்திற்குப் பின்னர் மெங் வான்சோ நேற்று விடுவிக்கப்பட்டு கனடாவை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்தே கனேடியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கனடா மற்றும் சீன தரப்பில் இரு நாடுகளின் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் இரண்டு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக இராஜதந்திர ரீதியான பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்ட இரு கனேடியர்களும் நம்பமுடியாத கடினமான சோதனைகளைச் சந்தித்ததாக செய்தியாளர்களிம் பேசிய பிரதமர் ட்ரூடோ கூறினார்.

இருவரும் சனிக்கிழமை அதிகாலை கனடாவுக்கு வருவார்கள். அவர்களுடன் சீனாவுக்கான கனடா தூதுவர் டொமினிக் பார்டனும் உடன் வருகிறார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.