Reading Time: < 1 minute

மூளையில் காயத்துடன் 32 பட்டங்களைப் பெற்று கனடிய பெண் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

நோவா ஸ்கோட்டியா மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான டொக்டர் ஸ்டெபெய்ன் அட்வோட்டர் என்ற பெண்ணே இந்த அரிய உலக சாதனையை படைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் போது, கார் விபத்தில்சிக்கி மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த காயம் காரணமாக ஞாபக மறதி நோய் ஏற்படும் என மருத்துவர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் உயிரியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலாவது இளங்கலைமானி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கணித செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இன்றளவிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், உலகில் அதிகளவான கல்விசார் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை அட்வோட்டர் நிலைநாட்டியுள்ளார்.

பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் இளநிலை பட்டங்களை அட்வோட்டார் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.