உலகில் அனைத்து பாலினத்தவர்களும் சமனானவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் எயார் கனடா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனடா அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் மூன்றாம் பாலினத்தவர்களின் கடவுச் சீட்டில் உள்ள பாலின அடையாளம் என்ற வரியில் ஆண் அல்லது பெண் என்பதற்கு பதிலாக non-binary ‘X (மூன்றாம் பாலினத்தவர்கள்) என குறிப்பிடலாம் என்று அறிவித்தது.
இந்த நிலையில் குறித்த நடைமுறையை அமுல்படுத்தும் வகையில் எயார் கனடா விமான நிறுவனம் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விமான அறிவிப்பின் போது எப்போதும் ‘ladies and gentlemen’ என ஆண்கள் மற்றும் பெண்களை மாத்திரம் விழிக்கும் வசனங்களை இனி பயன்படுத்தப் போவதில்லை என்று எயார் கனடா தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக ’everybody’ (அனைவரும்) என்ற வசனத்தைப் பயன்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எல்லா பாலினத்தவர்களுக்கும் மரியாதை வழங்கும் விதமாகவும், பன்முகத்தன்மையை நிலைநாட்டவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.