Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிபெக் ஹாக்கி பயிற்சியாளரின் எஸ்டேட் மீது ஒன்ராறியோ நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தாம் இளைஞராக இருக்கும் போது தம்மை அந்த பயிற்சியளர் துஸ்பிரயோகம் செய்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜான் டோ என தம்மை அடையாளப்படுத்தியுள்ள அந்த நபர் ராபர்ட் டாசன் என்பவரின் எஸ்டேட் மீதே புகார் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் ராபர்ட் டாசன் மீது இரு நபர்கள் ஏற்கனவே துஸ்பிரயோகம் தொடர்பான புகார் அளித்துள்ளதை அடுத்து 2021 செப்டம்பர் மாதம் வின்னிபெக் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் 2021 அக்டோபர் மாதம் ராபர்ட் டாசன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு தற்கொலை என அறிவிக்கப்பட்டது.

தற்போது 40 வயது கடந்த ஜான் டோ, தமக்கு 12 அல்லது 13 வயதிருக்கும் போது ராபர்ட் டாசனை சந்தித்ததாகவும், அப்போது அவர் ஹொக்கி அணி பயிற்சியாளராக இருந்தார் எனவும் ஜான் டோ குறிப்பிட்டுள்ளார்.

தம்மை அவரது குடியிருப்புக்கு பலமுறை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி காண அழைத்து சென்றதாகவும், சட்டத்தரணியாகவும் பணியாற்றி வந்த டாசன், கல்வியிலும் தமக்கு உதவியதாக டோ கூறியுள்ளார்.

மேலும் தமக்கு 14 வயது இருக்கும் போது டாசன் பலமுறை ஆபாசமான முறையில் தம்மை புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் ஜான் டோ கூறியுள்ளார்.