காலமான முன்னாள் ஒன்ராறியோ மாநில சுகாதார அமைச்சர் டேவிட் கப்லான் வீட்டில் இருந்து ஆண் ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், தற்போது அங்கே திடீர் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Lawrence Avenue மற்றும் Don Valley Parkway பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த வீட்டில் ஆண் ஒருவர் தீக் காயஙகளுக்கு உள்ளானதாக நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வேளையில் அவசர உதவி அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விட்டின் வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினாலேயே அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்பு ஏற்பட்டமைக்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த மரணம் குறித்து ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தனது இரங்கல்களை வெளியிட்டு்ளள நிலையில், மாநில அமைச்சரவையிலிருந்தும் சிலர் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.