பிரித்தானிய முடியாட்சி தொடர்பில் கனேடிய மக்கள் மத்தியில் சாதகமான நிலை கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனடா தொடர்ந்தும் முடியாட்சியின் கீழ் இயங்க வேண்டுமென வெறும் 19 வீதமானவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 31 வீதமானவர்கள் முடியாட்சிக்கு ஆதரவினை வெளியிட்டிருந்தனர்.
எனினும் தற்பொழுது இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது.
கனேடிய மக்கள் மத்தியில் பிரித்தானிய முடியாட்சி மற்றும் அரச குடும்பம் தொடர்பிலான நல் அபிப்பிராயம் வீழ்ச்சியடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் அநேகமான மாகாணங்களில் வாழும் மக்கள் பிரித்தானிய முடியாட்சியை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் மறைவின் பின்னர் மக்கள் மத்தியில் அரச குடும்பம் பற்றிய சாதக நிலை குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.