Reading Time: < 1 minute

ஒமிக்ரான் சுனாமி, 17 மில்லியன் கனேடியர்களை பாதித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இன்னமும் பிரச்சினை தீரவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

2021 டிசம்பருக்கு முன் 7 சதவிகிதம் கனேடியர்கள் கோவிடால் பாதிக்கப்பட்டிருந்ததாக பெடரல் நோயெதிர்ப்பு சக்தி அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கண்டுபிடித்தது. ஆனால், மே இறுதியில், அது 56 சதவிகிதமாக அதிகரித்திருந்தது.

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், அத்தனை பேர் கோவிடால் பாதிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் கொரோனா தாக்காது என்று கூறமுடியாது என்கின்றன. அதாவது, புதிது புதிதாக வரும் கொரோனா மாறுபாடுகள், மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றை உருவாக்கி வருகின்றன.

இந்த ஒமிக்ரானால், நாம் தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்றுக்கள் காரணமாக பெற்றுள்ள நமது நோயெதிர்ப்பு சக்தியையும் ஊடுருவி, மீண்டும் நம்மை பாதிக்க முடியும் என்கிறார் மொன்றியலைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரான Dr. Catherine Hankins.

ஆக, எத்தனை முறை உங்களுக்கு கொரோனா தொற்றக்கூடும் என்பது, கொரோனா வைரஸ் எப்படி உருமாற்றம் பெறப்போகிறது, அதற்கு ஈடாக தடுப்பூசிகள் உருவாக்கப்படுவது என்பதையெல்லாம் பொருத்தது என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆக, கொரோனா முற்றிலுமாக முடிந்துபோய்விடவில்லை, அது ஏற்கனவே ஏராளமான கனேடியர்களை பாதித்தும், இன்னமும் மீண்டும் மீண்டும் பாதிக்கக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.