Reading Time: < 1 minute

கனேடிய அரசாங்கம் மீளவும் உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

ரஸ்யாவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு ஈடு கொடுப்பதற்காக உதவிகளை வழங்குமாறு உக்ரைன் உலக நாடுகளிடம் கோரியுள்ளது.

அதி நவீன பீரங்கிகள்

சுமார் 47 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகள் இவ்வாறு கனடா, உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

அதி நவீன பீரங்கிகள் அதற்கான தோட்டாக்கள், துப்பாக்கிகள், ட்ரோன் கமராக்கள், குளிர்கால அங்கிகள், செய்மதி தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கனடா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

பெல்ஜியத்தில் உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சந்தித்த போது கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த உதவிகள் குறித்து அதிகாரபூர்வமான உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் உக்ரைனுக்கு சுமார் 600 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை கனடா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.