Reading Time: < 1 minute

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

றோயல் வின்ட்ஸோர் மற்றும் சவுத்டவுன் வீதி என்பனவற்றிற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்த போது, வாகன தரிப்பிடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலுதவிகள் வழங்கப்பட முன்னதாகவே குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.