Reading Time: < 1 minute

மிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

டக்ஸி வண்டியொன்று மின் கம்பம் ஒன்றில் மோதுண்ட காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மிஸ்ஸிசாகாவின் வுல்ப்டேல் மற்றும் சென்ட்றல் வீதி என்பனவற்றிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

25 வயதான நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த வாகனத்தில் ஒருவர் பயணம் செய்துள்ளார் எனவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.