Reading Time: < 1 minute
மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மிஸிஸாகாவின் 410ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 52 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சில வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும் இதில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கு முன்னதாக குறித்த நபருக்கு நோய் நிலைமைகள் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினால் குறித்த உயிரிழந்த நபருக்கு காயங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என உயிர்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.