மானிட்டோபாவை கடந்த வருடம் தாக்கிய பனிப்புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மில்லியன் டொலர்களை மாகாண அரசாங்கம் ஒதுக்கவுள்ளதாக, மானிட்டோபா முதல்வர் பிரையன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார்.
மானிட்டோபாவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தாக்கிய கடும் புயலினால், நூற்றுக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
குறிப்பாக போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் புயலின் போது மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது.
இந்த நிலையில் இப்புயலினால் பாதிக்கப்பட்ட நகராட்சிகள், வீட்டு உரிமையாளர்கள், பண்ணைகள் மற்றும் சிறு தொழில்கள் இப்போது பேரழிவு நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன.
ஆகவே இவர்களுக்கு பேரழிவு நிதியினை ஒதுக்க மானிட்டோபா மாகாணம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் அறியப்படவில்லை என்றாலும்,இது 12.5 மில்லியன் டொலர்கள் வரம்பில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த தொகை போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.