Reading Time: < 1 minute
ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலிவுவிலை வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிதியீட்டம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்துறை அமைச்சர் சேன் ப்றேசர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏனைய அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களை விடவும் ஒன்றாரியோ பின்னிலை வகிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடன்படிக்கையின் அடிப்படையில் மூன்றாண்டு காலப் பகுதியில் 94 வீதமான வீடுகள் நிர்மானிக்கப்பட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.