கனடாவில் மரங்கள் வளர்க்கப்படுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகம் என ஆய்வு தகவல் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
கனடியர்களில் 25 வீதமானவர்களுக்கு ஏற்படக்கூடிய பருவ கால ஒவ்வாமைக்கு மரங்களின் பால்நிலை ஓர் ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஆண் மரங்கள் பழங்கள் மற்றும் பூக்களை தருவதில்லை என்ற காரணத்தினால் நகரங்களில் அதிக அளவு ஆண் மரங்களை வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செயற்கையான முறையில் இந்த ஆண்கள் மரங்கள் உருவாக்கப்படுகின்றன.
எவ்வாறெனினும், ஆண் மரங்கள் அதிக அளவு மகரந்த துகள்களை உற்பத்தியை செய்வதாகவும் இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சில மரங்களின் மகரந்த துகள் பரவுகை அடிப்படையில் மக்களுக்கு அது ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.