மனிதக் கடத்தல் மற்றும் உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் பணத்தை ஒன்றாரியோ அரசாங்கம் மறு முதலீடு செய்வதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, இது ‘குடிமக்கள் தீர்வுகள் மானியத் திட்டம்’ என்று அழைக்கப்படும் ஒரு முன்முயற்சியின் மூலம் மாகாணச் சட்டச் செயலாக்க முகவர் மற்றும் சமூகப் பங்காளிகளுக்கு நிதியளிக்கும்.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாகாண அளவிலான ஆதரவை வழங்கும் ஒரு திட்டம் உட்பட 33 திட்டங்கள் பணத்தின் ஒரு பங்கைப் பெறும்.
வீடற்ற தங்குமிட ஊழியர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களில் வசிப்பவர்களுக்கு ஆதரவாக 241 மில்லியன் டொலர்களை அரசாங்கம் வழங்கவுள்ளது என ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
வீடற்ற தங்குமிட ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் உதவுவதற்காக எங்கள் அரசாங்கம் நகராட்சிகள் மற்றும் பழங்குடிச் சமூகங்களுக்கு 241 மில்லியன் டொலர்களை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாடகை ஆதரவு திட்டங்களை விரிவுபடுத்தியும், நீண்டகால வீட்டுத் தீர்வுகளை உருவாக்கியும் 1,500க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகளை நாங்கள் உருவாக்குகிறோம் அல்லது புதுப்பிக்கிறோம் என்றும் முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.