Reading Time: < 1 minute
மனிடோபாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை மீறும் தனி மனிதர்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அபராதத் தொகை 486 டொலரிலிருந்து 1,296 டொலராக உயரும் என மாகாண முதல்வர் பிரையன் பாலிஸ்டர் அறிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரை, அபராதம் 2,542 டொலரிலிருந்து 5,000 டொலர்களாக உயர்ந்துள்ளது.
மனிடோபா தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் சஸ்காட்செவனை விட அதிக செயலில் உள்ள தொற்றுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அல்பர்ட்டா, கியூபெக் மற்றும் ஒன்றாரியோவுடன் ஒப்பிடுகையில் அவை மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
இருந்தாலும் நமது மாகாணத்தில் கொவிட் -19 தொற்றுகளின் சமீபத்திய எழுச்சி கவலை தரத்தக்கது. அதனால்தான், மனிடோபன்களைப் பாதுகாக்க நமது அரசாங்கம் மேலும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாகாண முதல்வர் கூறினார்.