மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார் 200 பேர் வசிக்கும் சுமார் 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு பழங்குடி சமூகத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா இதுவரை கண்டிராத பாரிய வன்முறைச் செயல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘கொடூரமான மற்றும் இதயத்தை உடைக்கும். இன்று நடந்த கொடூரமான தாக்குதல்களால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இன்றைய கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் முழுமையாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோருக்கிடையிலான உறவு முறை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. மேலும் அதிகாரிகள் இதுவரை கூடுதல் விபரங்களை வழங்கவில்லை.