Reading Time: < 1 minute

ஜமைக்காவில் ஒருவார காலம் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஜமைக்காவில் குடும்பத்துடன் பிரதமர் ட்ரூடோ விடுமுறை கொண்டாட மக்கள் வரிப்பணத்தில் 162,000 டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா மக்களின் அன்றாட நிலை தொடர்பில் பிரதமர் ட்ரூடோ புரிந்து கொண்டதாக தாம் கருதவில்லை என விமர்சித்துள்ளார் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்.

ஜமைக்காவில் பெரும் செல்வந்தர் ஒருவரின் எஸ்டேட்டில் ட்ரூடோ குடும்பம் தங்கியுள்ளது. சாதாரண கனடா மக்கள் தங்களின் சுகாதார சேவைகளை நிறைவேற்றவும் வீட்டுச் செலவில் சிரமப்படுகின்ற நிலையில் பொறுப்புள்ள பிரதமர் மக்கள் வரிப்பணத்தில் இப்படியான ஒரு விடுமுறை கொண்டாட்டத்திற்கு செலவிட்டுள்ளதை சுட்டிக்காட்டுவது தங்கள் கடமை என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, ஜமைக்காவில் தமது குடும்பம் தங்கியிருந்தது 50 ஆண்டுகளாக தொடரும் ஒரு நண்பரின் குடும்பத்தினருடன் எனவும், தமது விடுமுறை பயணம் தொடர்பிலான அனைத்து திட்டங்கலும் உரிய குழுவினரால் முறைப்படி ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையும் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.