பிரித்தானியாவின் மகாராணி காலமானதன் காரணமாக கனேடிய நாணயங்களில் தாக்கம் ஏற்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நாணயத் தாள்களில் பிரித்தானிய மகாராணியின் உருவம் காணப்படுகின்றது.
கனடாவின் அரச தலைவராகவும் மகாராணி கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த அரச தலைவராக மகாராணியின் புதல்வர் இளவரசர் சார்ள்ஸ் கடமையாற்ற உள்ளார். இந்த பதவி மாற்றத்துடன் நாணயத் தாள்களில் உடனடி மாற்றங்கள் செய்யப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
20 டொலர் நாணயத் தாள்களில் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 டொலர் நாணயத் தாளில் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதனை அரசாங்கம் இப்போதைக்கு மாற்றக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
மகாராணியின் தந்தையான ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அவர் இறந்து சில தசாப்தங்கள் வரையில் புழக்கத்த்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.