ஒன்ராறியோவில் பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுக்களின் புதிய தலைவர்களை ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபேர்ட் அமைச்சரவை தேர்வு செய்துள்ளது.
சுயாதீன பொலிஸ் மீளாய்வு இயக்குநரின் அலுவலகத்தை மூத்த வழக்கறிஞரான ஸ்டீபன் லீச், தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், ஈராக், ஜோர்ஜியா மற்றும் ரியூனிசியா போன்ற நாடுகளில் ஆளுகை கட்டிடம், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பணியாற்றியவர் ஆவார்.
பொலிஸாருக்கெதிரான பொது முறைப்பாடுகளை ஆராய மற்றும் பொலிஸில் முறையான சிக்கல்களை மதிப்பாய்வுசெய்ய இவருக்கு அதிகாரம் உள்ளது.
சிறப்புப் புலனாய்வு பிரிவு, ஜோசப் மார்டினோ என்ற வழக்கறிஞரால் வழிநடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் புலனாய்வு பிரிவில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த ஏப்ரல் முதல் இடைக்கால இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
பொலிஸாருடனான தொடர்புகளின்போது நிகழும் பொதுமக்களின் மரணம், கடுமையான காயம், பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் போன்றவற்றை சிறப்புப் புலனாய்வு பிரிவு விசாரிக்கின்றது.