Reading Time: < 1 minute
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி மெக்சிகோவுக்கு பயணம் செய்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து குறித்த நபர் மெக்சிகோ வரையிலான பயணத்திற்கு முழுக்க முழுக்க பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி உள்ளார்.
வில்லியம் ஹுய் என்ற நபரை இவ்வாறு பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தி இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
ஒன்பது நாட்கள் சுமார் 3000 கிலோமீட்டர் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
பஸ் மற்றும் ரயில்களை பயன்படுத்தி அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஜன்னலோர ஆசனங்களில் அமர்ந்து காட்சிகளை பார்த்து மகிழ்வது அனாதியானது எனவும் அந்த அனுபவத்தை தாம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கனடாவில் இருந்து மெக்சிகோ வரையிலான பயணத்திற்கு தமக்கு சுமார் 200 அமெரிக்க டொலர்கள் செலவானதாக வில்லியம் ஹுய் தெரிவித்துள்ளார்.