கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Mount Pleasant என்னும் இடத்தில், சிறுவன் ஒருவன் பேருந்திலிருந்து இறங்கும்போது கதவில் சிக்கி இழுத்துச்செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பதறச்செய்துள்ளன.
தந்தையின் கண் முன்னே பேருந்தின் கதவில் சிக்கிய சிறுவன்
வில்லியம் என்னும் சிறுவனும் அவனது சகோதரனும் பள்ளிக்குச் சென்றுவிட்டு பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அவர்களுடைய வீட்டின் முன்னால், பிள்ளைகளுக்காக அவர்களுடைய தந்தையான Derek Tappen காத்திருந்திருக்கிறார்.
பிள்ளைகள் பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறார்கள். மூத்தவன் முதலில் இறங்க, அவனைத் தொடர்ந்து அவனது தம்பியான வில்லியம் இறங்கும்போது பேருந்தின் கதவு மூட, கதவுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறான் அவன்.
அதைக் கவனிக்காத பேருந்தின் சாரதி பேருந்த இயக்க, வில்லியம் சற்று தூரம் இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறான். தன் கண் முன்னே தன் பிள்ளை இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு பதறிய Derek சத்தமிட்டுக்கொண்டே ஓடியிருக்கிறார்.
கமெராவில் சிக்கிய காட்சி
இந்த காட்சிகள் Derekஇன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
கதவுக்கிடையில் சிக்கிய வில்லியம் இழுத்துச் செல்லப்பட, Derek சத்தமிட்டுக்கொண்டே ஓட, அதைக் கவனித்த பேருந்திலிருந்த மற்ற பிள்ளைகள் சத்தமிட்ட பிறகே பேருந்தின் சாரதி அதைக் கவனித்து பேருந்தை நிறுத்தியிருக்கிறார்.
வில்லியம் இழுத்துச் செல்லப்பட்டதால் அவனுடைய கால்களில் காயங்கல் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், அதிலும் ஒரு நன்மை இருப்பதாக கருதுகிறார் Derek.
ஒருவேளை பேருந்து நகரத்துவங்கியதும் கதவு திறந்திருந்தால், வில்லியம் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரங்கள் அவன் மீது ஏறியிருக்கக்கூடும் என்று நினைக்கிறார் அவர்.
இந்த பதறவைக்கும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.