பணக்காரக் கனேடியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்க என்டிபி அழைப்பு விடுத்துள்ளது.
கனடாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் தற்போதைய தொற்றுநோயிலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்துள்ளதாவும் நாட்டின் மீட்புக்குப் பணம் செலுத்துவது அவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
கனேடியக் குடும்பங்கள் பணம் செலுத்த மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தப் புதிய ஜனநாயகவாதிகள் பிரதமரை நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுப்பதாக அவர் அறிவித்தார்.
குடும்பங்கள் போராடி வருகையில், பெரும் செல்வந்தர்கள் தொற்றுநோயிலிருந்து பில்லியன்களை ஈட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
20 மில்லியன் டொலர் சம்பாதிக்கும் எவரையும் முன்மொழியப்பட்ட வரியானது பாதிக்கும். மக்களுக்குத் தேவையான உதவி என்பது திட்டங்களுக்குப் பணம் செலுத்தவது. அது குடும்பங்கள், மக்கள், தொழிலாளர்கள் மற்றும் போராடிய சிறு தொழில்கள் ஆக இருக்கக்கூடாது.
இது தொற்றுநோயிலிருந்து லாபம் ஈட்டியவர்களாகவும், தீவிர செல்வந்தர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஜக்மீத் சிங் கூறினார்.