பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பால்நிலை சமத்துவும், வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள், பெண்கள் இரவில் தனியாக செல்வதற்கு காணப்படும் பாதுகாப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் அயர்லாந்து முதலாம் இடத்தை வகிக்கின்றது.
இந்தபட்டியலில் இரண்டாம் இடம் ஆஸ்திரியாவும், மூன்றாம் இடம் நோர்வேயும், ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகில் வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி வகிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.