Reading Time: < 1 minute

முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் நான்கு ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளது.

பொலிஸாரின் பயன்பாட்டுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் கொள்ளைகளை தடுப்பதற்கும், காணாமல் போனவர்களை தேடுவதற்கும் இந்த நான்கு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

ரொறன்ரோ, பீல், ஹால்டன் மற்றும் டர்ஹம் பிராந்திய பொலிஸார் இணைந்து ஹெலிகொப்டர் பொலிஸ் சேவையை வழங்க உள்ளனர்.

இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு 36 மில்லியன் டொலர் நிதி செலவிடப்பட உள்ளதுடன், பராமரிப்பிற்காக 10 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளது.

இந்த ஹெலிகொப்டர்களை மாகாண பொலிஸார் பயன்படுத்துவார்களா அல்லது பிராந்திய பொலிஸார் பயன்படுத்துவார்களா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அண்மை நாட்களாக கனடாவின் பல பகுதிகளிலும் கார் திருட்டுச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

இவ்வாறான ஓர்பின்னணியில் ஹெலிகொப்டர்களைக் கொண்டு இந்த கார் திருட்டுச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட உள்ளன.