பீல் பகுதி மாகாணத்தின் கொவிட்-19 வழிகாட்டுதல்களை மிகவும் மென்மையானது என்று நிராகரித்து, அதன் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுவருகிறது.
தொற்று எண்ணிக்கை மற்றும் சோதனை நேர்மறை வீதங்கள் அதிகமாக உள்ளன, பொது சுகாதார திறன் மெல்லியதாக உள்ளது. மற்றும் மருத்துவமனைகள் சில நடைமுறைகளை ரத்து செய்துள்ளன என்று பிராந்திய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை தொடங்கி, மதுபானச்சாலைகள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்கள் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமரக் கட்டுப்படுத்த வேண்டும். கலப்பு இருக்கைகள் அனுமதிக்கப்படாது.
உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உடற்பலப்பயிற்சி மையங்கள் அனைத்து வகுப்பு பங்கேற்பாளர்களும் முன்கூட்டியே பதிவுசெய்து துல்லியமான தொடர்புத் தகவல்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நடைப்பயண பங்கேற்பு அனுமதிக்கப்படவில்லை.
விருந்து அரங்குகள் உட்படக், கூட்ட அரங்குகள் மற்றும் நிகழ்வு இடங்கள் மூடப்பட வேண்டும்
பிராந்தியத்தில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த வீடுகளின் உறுப்பினர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். தனியாக வசிப்பவர்கள் ஒரு தேர்வு செய்த வீட்டில் ஒன்று சேரலாம்.
பீல் குடியிருப்பாளர்கள் அவசரகால காரணங்களைத் தவிர வேறு எந்த வீட்டையும் பார்வையிடவோ அல்லது பார்வையாளர்களைத் தங்கள் வீடுகளுக்கோ அல்லது முற்றத்துக்கோ அனுமதிக்கக்கூடாது.
வணிக நடவடிக்கைகளில் விடுமுறைகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை கொண்டாடும் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமண வரவேற்புகள் குறைந்தது ஜனவரி வரை தடைசெய்யப்படுவது உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகள் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
பிராந்தியத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் மதச் சேவைகள் இணைய வழியில் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர், அது முடியாவிட்டால், உட்புறக் கொள்ளும்திறன் 50 பேருக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.