Reading Time: < 1 minute
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க கனடாவின் கூற்றுப்படி, முதல் நிலநடுக்கம் அளவு 5.1, இரண்டாவது 5.6, மூன்றாவது 5.8, நான்காவது 6.0, ஐந்தாவது 4.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
ஹார்டிக்கின் மேற்கே 175 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.