Reading Time: < 1 minute
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மண் சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம் மாகாணத்தின் சில இடங்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. மண் சரிவு நிலைமையினால் சிலர் காணாமல் போயிருந்தனர்.
வாங்கூவாரின் வடக்கு பகுதியான லயன்ஸ் பேய பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.
இந்த மண் சரிவு காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருந்தது.
மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை கண்டறிவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.