Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மான்கள் விபத்துகளில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை 6 மணித்தியால இடைவெளியில் ஆறு மான்கள் வாகனத்தில் மோதுண்டு உள்ளன. மாகாண போக்குவரத்து அமைச்சு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் குறித்த வீதிகளில் வேகக்கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநேக சந்தர்ப்பங்களில் மான்கள் வாகனங்களில் மோதுண்டு விபத்துக்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அதிவேக நெடுஞ்சாலைகளில் சராசரியாக 5700 வனவிலங்குகள் விபத்துக்குள்ளாவதாகவும் இவற்றில் சுமார் 75 வீதமானவை மான்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காலை 6:00 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 5 மணி வரையில் முதல் 8:00 மணி வரையிலும் அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் விபத்துக்கள் அதிகளவில் இடம் பெறுவதாகவும் மான்கள் இரவு நேரங்களில் கூடுதலாக சஞ்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் இந்த சவால்களை மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்து அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.