கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் எலி மருந்து வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் குறித்த மாகாணத்தில் எலி மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த எலி மருந்து வகைகளை பயன்படுத்துவதனால் வவ்வால்கள் உள்ளிட்ட ஏனைய வனவிலங்குகள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் எலி மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை தற்பொழுது நிரந்தரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
anticoagulant என்னும் எலி மருந்து வகைகளை பயன்படுத்துவதற்கு இவ்வாறு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை எலி மருந்துகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கடந்த 15 மாதங்களாக ஆய்வு நடாததப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எலி மருந்து வகைகளினால் பெரும் எண்ணிக்கையிலான வௌவால்கள் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.