Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 80 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்குஈ அடுத்த மாதம் முதல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் கிடைக்கும் என பொது சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும், மாகாணத்தின் தடுப்பூசி வழங்கல் அதிகரிக்கும் எனவும் தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசி எங்கு கிடைக்கும் என்று விரைவில் அறிந்து கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் விவரங்களை உருவாக்கி வருகிறோம். அடுத்த சிறிது நேரத்தில் அவை தெளிவாகிவிடும். நாம் மக்களைத் தொடர்புகொள்வதற்கு பல வழிகள் இருக்கும்.

மார்ச் மாத தொடக்கத்தில் பெருமளவு மக்களுக்கான தடுப்பூசிகள் போடுவது தொடங்கும் என்று மாகாணம் எதிர்பார்க்கிறது.

திட்டத்தின் தொடக்கத்திலிருந்து நோய்த்தடுப்பு மருந்துகளிலிருந்து 217 பாதகமான நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் 18 அனாபிலாக்ஸிஸ் அல்லது கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் உள்ளன’ என கூறினார்.

இதுவரை, தடுப்பூசிகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.