பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சில்லறை வர்த்தக பேரவையினால் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானதன் பின்னர் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் இவ்வாறு களவாட தொடங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தவிர்க்க முடியாமல் இவ்வாறு களவாடும் சம்பவங்கள் பதிவாகின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொருட்கள் களவாடப்படுவதினை முற்று முழுதாக தவிர்க்க முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைகளில் பொருட்கள் களவாடப்படுவதனை தவிர்ப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கடை உரிமையாளர்கள் முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்கள் களவாடப்படுவதனால் சில்லறை வியாபாரிகள் பில்லியன் கணக்கான டாலர் நட்டத்தை எதிர் நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சில சந்தர்ப்பங்களில் சில்லறை வியாபாரிகள் மற்றும் நிறுவன பணியாளர்கள் உயிர் ஆபத்தை கூட எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாட வருபவர்களின் தாக்குதல்களே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கத்தி முனையில், துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்படும் சம்பவங்களும் பதிவாகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
களவாடும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டுமானால் கடுமையான தண்டனைகளும் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.