பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாகாணத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய பள்ளிவாசல் நிர்வாகங்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டேவிட் எபியிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல்வேறு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் அண்மையில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய மக்களின் நிலவுரிமை தொடர்பில் வெளியிட்ட கருத்து பலஸ்தீன மக்கள் சமூகத்தை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டனவற்றுக்காகவும் பள்ளிவாசல்களுக்குள் என்.டி.பி கட்சியின் வேட்பாளர்களும் உறுப்பினர்களும் பிரவேசிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் செலினாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.