கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலைகனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது.
இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டது.
சமூகவலைத்தளங்களில் வெளியான பதிவு
இதையடுத்து 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக உணவு விடுதி முன் குவிந்த நிலையில் அதில், பெரும்பாலானோர் இந்திய இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து வலைதளங்களில் , “கனடாவில் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறதாக என்று ஒருவர் பதிவிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் படிக்கும் இளைஞர்கள் தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக உணவு விடுதிகளில் வேலைக்குச் செல்வது வழக்கமான ஒன்று எனினும் பகுதிநேரமாக இளைஞர்கள் வேலைக்குச் செல்வது வழக்கம்தான் என்றாலும், உணவு விடுதி வேலைக்கு இவ்வளவு இளைஞர்கள் குவிவது வழக்கம் இல்லை என ஒருவர் பதிவிட்டுள்ளார்.