Reading Time: < 1 minute

பிரம்டனில் அமைந்துள்ள பழைய உலோக சேகரிப்பு இடம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 407ற்று வடக்கே Intermodal Driveவில் அமைந்துள்ள குறித்த அந்த இடத்தில் நேற்று இரவு 6.11 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த இடம் முழுவதும் கரும்புகையினால் மூடப்பட்டிருந்ததாகவும் அவசர மீட்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தீப்பரவல் காரணமாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள சில கட்டிடங்களில் இருந்தோர் வெளியேற்றப்பட்டதாகவும், தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலை அடுத்து குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளையும், துப்பரவுப் பணிகளையும் முனனெடுத்து வருகின்றனர்.