பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்டத்தை கனடா செனட் சபை அங்கீகரித்துள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்ட மூலம் கனடா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
கன்சர்வேடிவ் கட்சி முன்வைத்த இந்தத் யோசனைக்கு ஆளும் லிபரல் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் இது ஏகமனதாக நிறைவேறியது.
ஆளும் லிபரல் கட்சியினர் முதன்முதலில் மார்ச் 2020 இல் இந்தச் சட்டத் திருத்த யோசனையை பாராளுமன்றில் அறிமுகப்படுத்தினர். ஆனால் அரசாங்கம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
ட்ரூடோவின் கட்சி இந்தச் சட்டத்திருத்த யோசனையை மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் செப்டம்பர் கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் பிரதான எதிர்கட்சி முன்வைத்த இந்த சட்டத்திருத்த யோசனை சில நாட்களுக்கு முன் ஆளும் லிபரல் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவுடன் பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேறியது.
பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம் செனட் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதனை செனட் சபை அங்கீகரித்துள்ள நிலையில் கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.