Reading Time: < 1 minute

பாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டமொன்றை, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ முன்வைத்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசனப் பட்டியை கொண்ட பேருந்துகள், சட்பெரி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அரிதான ஆனால் தீவிரமான பாடசாலை பேருந்து மோதல்களில் ஆசனப் பட்டியை அணிவதன் மூலம், கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பணிக்குழு அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

சரியான இருக்கை சரிசெய்தல் போன்ற சில முக்கியமான நடைமுறை அம்சங்களை மேலும் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன’ என கூறினார்.

குறித்த இரு இடங்களில் இத்திட்டம் வெற்றி அளித்தால், பின்னர் மற்ற மாகாணங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, முதற்கட்டமாக மூன்று பேருந்துகள் பரீட்சாத்தமாக இத்திட்டத்தில் இணையவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை பேருந்து பாதுகாப்பு தொடர்பான பணிக்குழுவின் அறிக்கையிலிருந்து கனடாவில் பாடசாலை பேருந்து பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு திட்டமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.