இளம்பெண் ஒருவரை நிச்சயம் செய்த நபர் ஒருவர், பல இலட்சம் செலவு செய்து அவரை கனடா அனுப்பிய நிலையில், அந்தப் பெண் அவரை விட்டு விட்டு வேறொரு நபரை திருமணம் செய்ததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Lapran என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங்குக்கும் லூதியானாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கௌர் என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இரு குடும்பத்தாரும் ஹர்ப்ரீத் கௌரை முதலில் கனடா அனுப்புவது என்றும், பின்னர் அவர் கணவனுக்கு விசா ஏற்பாடு செய்ததும் ஹர்ப்ரீத் சிங்கை கனடாவுக்கு அழைத்துக்கொள்வதென்றும் பேசி முடிவு செய்துள்ளனர்.
ஆனால், கௌர் கனடா சென்றதும், சிங்குடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.
அத்துடன், கனடாவில் கௌர் வேறொரு நபரைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சிங், தான் அவரை கனடாவுக்கு அனுப்ப 10 இலட்ச ரூபாய் செலவு செய்ததாக பொலிசில் புகாரளித்துள்ளார்.
ஆனால், பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி ஒன்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டார் சிங். தக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் கீழே இறங்கிவர சம்மதித்தார் சிங்.