பண்டைய கால புராணங்களில் குறிப்பிடப்படம் விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக கனடிய தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
இராட்சத விலங்கினமாக கருதப்படும் லோச் நெஸ் எனப்படும் விலங்கு ஒன்றை கண்டதாக கனடாவைச் சேர்ந்த பெரி பால்ம் மற்றும் செனன் வைஸ்மேன் ஆகியோரே இவ்வாறு குறித்த விசித்திர விலங்கினை கண்டதாக தெரிவிக்கின்றனர்.
ஸ்கொட்லாந்துக்கு அண்மையில் குடும்பத்துடன் சென்றிருந்த போது இந்த விலங்கினை பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது நம்பமுடியாத விளக்கப்பட முடியாத ஒன்றை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
நீர் நாய் ஒன்றை கண்டதாகவே இந்த தம்பதியினர் முதலில் நினைத்துள்ளனர்.
இது குறித்து படகின் கப்படனிடம் கூறிய போது இந்த பகுதியில் நீர் நாய்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.
குறித்த விலங்கின் புகைப்படம் ஒன்றையும் இந்த தம்பதியினர் வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படம் பிரித்தானிய ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 500 ஆண்டுகளுக்கு மேல் இந்த வகை விலங்கினத்தை மனிதர்கள் தேடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலங்கினை பார்த்ததாக கூறப்படும் அதிகாரபூர்வ பட்டியலில் இந்த கனடிய தம்பதியினரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
காலத்திற்கு காலம் இந்த வகை விலங்கினத்தை பார்த்ததாக பலர் தகவல் வெளியிட்டு வருகின்ற போதிலும் உறுதியான ஆதாரங்களும் சாட்சியங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.