Reading Time: < 1 minute

கியூபெக்கில் 130,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிலாளர் கூட்டமைப்பு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் என்95 முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இது இரண்டாவது அலை தொற்றை தடுப்பதற்கான ஒரு தயார்படுத்தல் என குறித்த தொழிலாளர் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பின் (எஃப்எஸ்எஸ்எஸ்-சிஎஸ்என்) தலைவர் ஜெஃப் பெக்லி, அரசாங்கமும் அனைத்து ஊழியர்களுக்கும் என்95 முகக்கவசங்களை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என கூறினார்.

மேலும், ‘நாங்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு சபையை, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று பெக்லி கூறினார்.