சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அதன்படி கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பீப்ள்ஸ், சுவிஸ்லாந்தை சேர்ந்த மைக்கேல் மேயர் மற்றும் திதியர் க்யூலோஸ் ஆகிய விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.