நோர்த் யோர்க்கில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 70 வயதுப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யோர்க் மில்ஸ் வீதி மற்றும் பேவியூ அவனியூவுக்கு மேற்கே, பீச்வூட் அவனியூ மற்றும் ஃபென் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நீச்சல் தடாகத்தில் பெண் ஒருவர் கவிழந்த நிலையில் மூழ்கியவாறு காணப்படுவதாக இன்று இரவு ஆறு மணியளவில் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்வவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர், சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கிய போதிலும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிடடதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது பெயர் விபரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடாத அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.