கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் சில கட்டுப்பாடுகள் தளத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
குழிப்பந்தாட்ட மைதானங்கள் மீண்டும் வணிகத்தில் ஈடுபட உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வளாக வசதிகளை திறக்கலாம்.
உடல் ரீதியான விலகி இருத்தலோடு, வெளியில் இருக்கும் வரை மதச் சேவைகள் மீண்டும் நடத்தப்படலாம். பெரிய கூட்டங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாகாணத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 118 தொற்றுகளில், 111பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஏழு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டாவது நாளாக அங்கு புதிய தொற்றுகள் பதிவாகாத நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.