கனடாவில் வாழ்ந்து வரும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து, வாடகை, உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பணத்தை செலவிடுவதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 41.3 வீதமானவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு அடகுக் கடன் மூலம் வீடு கொள்வனவு செய்தவர்களை விடவும், வாடகை குடியிருப்பாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஒன்றாரியோ பகுதியில் அதிகளவு மக்கள் நிதி நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பு வீடுகளின் பொருளாதாரச் சுமையை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.